ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து; 10 மாதங்களுக்குப் பின் 2 பேர் மீது வழக்குப்பதிவு

பேரூர் ஆதீனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து; 10 மாதங்களுக்குப் பின் 2 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார்

கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார்

Coimbatore | கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய நபர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் உள்ள பழமையான ஆதீனங்களில் ஒன்றான கோவை  பேரூர் ஆதீன மடத்தின் ஆதீனமாக மருதாச்சல அடியாளர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டது. இது தொடர்பாக சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் போலீசில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேஷ்பாபு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் 10 மாதங்களுக்குப் பின்னர் இந்த புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also see... ஆதாரம் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேரூர் ஆதீனம் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்ட நபர் மீது , வதந்தியை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Cyber crime