கோவையை சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் ஒருவர் சமூகவலைதள கணக்குகளை பயன்படுத்தி வந்தார். அவர் தனது புகைப்படங்களில், வீடியோக்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யோயோ செயலி ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து வந்த நிலையில் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிவதாக கூறி மதிஸ்வரன் என்பவர் யோ யோ செயலி மூலம் அறிமுகமானார்.
அந்த நபர் யோ யோ, பேஸ் புக், இன்ஸ்ட்டா ஆகிய சமூக வலைதள கணக்குகளில் போலியான புகைப்படங்களைப் பயன்படுத்தி அந்த இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். பின் அந்த பெண்ணின் மொபைல் எண்ணைப் பெற்று தொடர்ந்து அவரிடம் பேசியவர், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் சூலூரில் உள்ள விமானபடை பணிமனையில் , பணிபுரிவதாக நம்பி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த இளம்பெண்ணிடம் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு சொல்லி அவற்றை வாங்கியுள்ளார். மேலும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, சிறிய விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி ரூ.60,000 பணம் பெற்றுள்ளார்.
இதனிடையே திருமண ஏற்பாடு சம்பந்தமாக மதிஸ்வரனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அந்த நபரால் ஏமாற்றப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. சமூக வலைதள கணக்குகளில் இருந்த புகைபடங்களுக்கும் நேரில் அவர் இருப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதும், போலியான புகைபடத்தை காட்டி ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பெண் மதிஸ்வரனுடன் தொடர்பை துண்டித்து கொண்டார். இந்நிலையில் மதிஸ்வரன் 1 லட்சம் பணம் கேட்டதோடு, அந்த பணத்தை கொடுக்கவில்லை எனில் இளம் பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியுள்ளார்.ஆனால் அந்தப் பெண் பணம் கொடுக்க முன் வராததால் , சமூகவலைதளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி அந்த பெண்ணின் அந்தரங்க புகைபடங்களை, அதில் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கோவை மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் மதிஸ்வரன் என்று யாரும் கிடையாது எனவும், விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர்தான் இந்திய விமானப்படையில் பணிபுரியும் ஊழியராக சமூக வலைதளங்களில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது.
Also see...பஸ் ஸ்டாப்பில் நடந்த கல்யாணம்! கல்லூரி மாணவனுக்கு போலீசார் அறிவுரை!
இதனை அடுத்து பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Coimbatore, Cyber crime, Police