ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் செல்போன் கடையில் கைவரிசை - சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

கோவையில் செல்போன் கடையில் கைவரிசை - சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

கோவை கொள்ளை சம்பவம்

கோவை கொள்ளை சம்பவம்

Coimbatore news : சுந்தராபுரம் பகுதியில் மட்டும் நேற்று  ஒரு நாளில் மூன்று கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள செல்போன்  கடையில் மர்மநபர் புகுந்து செல்போன்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கோவை சுந்தராபுரத்தில் சாரதா ரோடு பகுதியில் உள்ள பி.கே மொபைல் என்ற கடை   இரண்டரை வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மொபைல் கடையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர், கடைக்குள் புகுந்து  மொபைல்களை திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் புண்ணியக்கோடி என்பவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடைக்குள் புகுந்து செல்போன்களை திருடக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடைக்குள் டார்ச்லைட் உடன் உள்ளே நுழையும் கொள்ளையன் அங்கு இருக்கும் பொருள்களை நோட்டமிட்டு திருடு செல்வது பதிவாகியுள்ளது. 

Also Read:  கோவையின் அடுத்த அடையாளம் இது தானா? - ஜொலிக்கும் ரேஸ்கோர்ஸ் சாலை!

கடையில் இருந்து ஒரு லட்சம் மதிப்புடைய செல்போன்களை  திருடி சென்றதாக கடையின் உரிமையாளர்  புண்ணியக்கோடி தெரிவித்துள்ளார். மேலும் அந்தப்பகுதியில் நேற்று  ஒரு நாளில் மட்டும் மூன்று கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Published by:Ramprasath H
First published:

Tags: CCTV Footage, Coimbatore, Crime News, Theft