ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த ஜமோசா முபீனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு..!

கோவை கார் வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த ஜமோசா முபீனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு..!

உயிரிழந்த ஜமோசா முபின்

உயிரிழந்த ஜமோசா முபின்

உடல் பாகங்கள் 13 விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமோசா முபீனின் உடல் 13 விதமான பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அவரது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    கோவை உக்கடம் பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே ஞாயிறு அதிகாலை நான்கு மணியளவில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் இறந்தார்.

    பழைய துணி விற்பனையாளரான அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், சார்க்கோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது.

    சிசிடிவி காட்சிகளில் உள்ள 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கார் வெடி விபத்து தொடர்பாக குன்னூரை அடுத்த ஓட்டுப்பட்டரை பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜமேஷாவின் உடல் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சட்ட மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ஜெயசிங் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்திய நிலையில், முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் உடல் பாகங்கள் 13 விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் வாசிக்க: கோவை கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு.. உளவுத்துறை தகவல்!

    பிரேத பரிசோதனைக்குப் பின் ஜமேஷாவின் உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் திப்பு சுல்தான் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தைக் தொடர்ந்து, நகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Coimbatore