Home /News /coimbatore /

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை – ரூ. 171 கோடி அபராதம் விதிப்பு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்களுக்கு 27 ஆண்டுகள் சிறை – ரூ. 171 கோடி அபராதம் விதிப்பு

பாசி நிறுவன இயக்குனர்கள் மோகன் ராஜ் - கமலவள்ளி

பாசி நிறுவன இயக்குனர்கள் மோகன் ராஜ் - கமலவள்ளி

வழக்கை முழுமையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அபராத தொகையினை சாட்சியம் அளித்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை  முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

    திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 1402 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின் போது நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில், இயக்குநர்கள் கமலவல்லி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆஜராகினர். வழக்கில் தீரப்பளித்த நீதிபதி ரவி, பாசி நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என  அறிவித்தார்.

    தமிழ் அறிஞர்களை கொச்சைப்படுத்தினால் தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்- ஆளுநருக்கு கேஎஸ் அழகிரி கண்டனம்

    இருவருக்கும் 27  ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனை விதித்த நீதிபதி, 171 கோடியே 74 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும்  வழக்கை முழுமையாக விசாரிக்காத சிபிஐக்கு  நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அபராத தொகையினை சாட்சியம் அளித்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

    பாசி நிதி நிறுவனத்தால் 58571 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  930 கோடி மோசடி எனவும்  என சிபிஐ  குற்றபத்திரிகை செய்துள்ள நிலையில் 1402 பேரை மட்டும் ஆஜர்படுத்தி விட்டு மற்றவர்களை ஆஜர்படுத்தாததற்கு சிபிஐக்கு  நீதிபதி ரவி கண்டனம் தெரிவித்தார். இனிமேல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் சிபிஐ மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

    தமிழகம் உட்பட  பல்வேறு மாநிலங்களில்  ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்த நிலையில் தற்போது இதில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இருப்பதுடன், புகார் அளிக்காத பிறருக்கும் மீண்டும் புகார் அளிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Coimbatore, Scam, Thiruppur

    அடுத்த செய்தி