கோவை புதூர் பகுதியில் JRD என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வருபவர் ராஜேந்திரன். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்திய போது JRD ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் JRD ரியல் எஸ்டேட் நிறுவனம் கோவை புதூர் பகுதியில் புதியதாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்பை கட்டி வருகின்றது. இந்நிலையில் அந்த குடியிருப்பு கட்டிடங்களை இன்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
JRD ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிவரும் வீடுகள் முறையாக மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டு இருக்கின்றதா, வரைபடத்தில் இருக்கும் வாக்கில் வீடுகள் இருக்கின்றதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
Must Read : அப்பாவை நான் சமாதானப்படுத்துறேன்.. நம்பி வந்த மகள்..கொன்று பழித்தீர்த்த தந்தை - கோவில்பட்டி கொடூரம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்திய போது JRD ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் கட்டிவரும் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Coimbatore, SP Velumani