முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடி... பரபரப்பு சம்பவம்..!

கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடி... பரபரப்பு சம்பவம்..!

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

கோவையில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அரக்கோணம் நீதிமன்றத்திலும், சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இவர்களில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்ட சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணைக்காக கரட்டுமடம் பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்ப முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் சஞ்சய் ராஜாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: Police encounter, Shooting