ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்!? வீடியோ வெளியானதால் சர்ச்சை!

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்!? வீடியோ வெளியானதால் சர்ச்சை!

பயிற்சி நடத்தப்பட்டபோது எடுத்த புகைப்படம்

பயிற்சி நடத்தப்பட்டபோது எடுத்த புகைப்படம்

பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு. மேலும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோயம்புத்தூரில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைபடம், வீடியோ காட்சிகள் இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியானது.

  இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் ஆய்வாளர் தலைமையில் போலீசார் தற்போது அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் , கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என தகவல் அளித்துள்ளார்.

  பயிற்சி நடத்தப்பட்டபோது எடுத்த புகைப்படம்

  பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார்.

  இதையும் படிக்க : கொல்கத்தா பீடா..மணக்கும் மட்டன் பிரியாணி! சைவத்திலும் பல வகை! தடபுடலாக நடக்கும் திமுக பொதுக்குழு!

  மாநகராட்சி பள்ளியில் பயிற்சி நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று மதியம் 1 மணிக்கு பள்ளியை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது.

  இந்நிலையில் மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்படும் என்றும்,  பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Coimbatore, Govt School, RSS