ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரால் கோவையில் மீண்டும் சர்ச்சை..!

மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரால் கோவையில் மீண்டும் சர்ச்சை..!

பெங்காலி மொழியில்  பேனர்

பெங்காலி மொழியில் பேனர்

Coimbatore | கோவையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியில் பெங்காலி மொழியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழக அரசு இருமொழி கொள்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் காந்தி பார்க் உட்பட வட மாநிலத்தவர் வசிக்கும் பகுதியி்ல் பெங்காலி மொழியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி பார்க், தெலுங்கு பாளையம் பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது இடங்களில் குப்பைகள் போடக்கூடாது என்பதை வட மாநில மக்களுக்கு உணர்த்தும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் பல இடங்களில்  பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் மொழியுடன்  பெங்காலி மொழியிலும் குப்பை கொட்டக்கூடாது. மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Also see... ''அனைவருக்கும் நன்றி'' - மனம் உருகி தேங்க்ஸ் சொன்ன ரஜினிகாந்த்!

ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து மோதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் , கோவை மாநகரில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெங்காலி மொழியில் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Coimbatore, Tamil language