முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ஈரோடு கிழக்கில் திமுகவின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஈரோடு கிழக்கில் திமுகவின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அனைத்து தேர்தலிலும் ஒரு கட்சி வெற்றிபெற முடியாது. இந்த தேர்தலை வைத்து திமுக வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகபடி நின்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என கோவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி. திரிபுரா, நாகலாந்து பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமருக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, ‘இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. பணமழை பொழிந்துள்ளது. 22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர் போல் பணத்தை வாரி இறைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து வெள்ளி கொலுசு, வாட்ச், குக்கர், வாக்காளர் வீடுகளுக்கு அசைவம் ஆகியவை கொடுத்து மளிகை சாமான் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் புகார் செய்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகபடி தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றுள்ளார்கள். திமுக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்தது. வாக்காளர் பெருமக்களை பட்டியில் அடைத்தது ஒரு சில ஊடகங்களில் மட்டும் வெளிகொண்டுவந்தது. ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இதையும் படிக்க :  "திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து தேர்தலிலும் ஒரு கட்சி வெற்றிபெற முடியாது. இந்த தேர்தலை வைத்து திமுக வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவின் இந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வியாக நான் பார்க்கிறேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.

கொரோனா தொற்று உள்ளிட்ட காலங்களில் ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாத சூழலில் இருந்தனர். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பரிசு பொருள் கொடுக்கிறோம் என வாக்கு பெற்றுள்ளனர். மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை. தற்போது நடந்தது ஜனநாயக படுகொலை. இது மிகப்பெரிய பேராபத்து என கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : ஆரோகிய ஜெரால்டு (கோயம்பத்தூர்)

First published:

Tags: Congress, DMK, Edappadi Palaniswami, Erode Bypoll, Local News