முகப்பு /செய்தி /Coimbatore / அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி பக்கோடா தட்டுக்களை கையில் ஏந்தியபடி காங்கிரஸ் போராட்டம்!

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி பக்கோடா தட்டுக்களை கையில் ஏந்தியபடி காங்கிரஸ் போராட்டம்!

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி பக்கோடா தட்டுக்களை கையில் ஏந்தியபடி காங்கிரஸ் போராட்டம்!

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி பக்கோடா தட்டுக்களை கையில் ஏந்தியபடி காங்கிரஸ் போராட்டம்!

இந்திய ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கையில் பக்கோடாவை வைத்துக்கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ராணுவத்திற்கு ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு  காங்கிரஸ் கட்சியின்  செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரியும், நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கதுறை விசாரிப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது கையில் பக்கோடா தட்டுக்களை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அக்னிபத் திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அக்னிபத் திட்டம் தொடர்பான உத்தரவு நகல்களை கிழித்து எறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

First published:

Tags: Agnipath, Congress