கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குதிரைபண்ணையில் இருந்து உரிமையாளருக்கு தெரியாமல் குதிரைகளை விற்று 2.5 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர்(வயது47). துபாயில் வசித்து வரும் இவர் அரேபிய குதிரைகளை வெளிநாட்டில் வாங்கி இந்தியாவில் குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலெல்லாம் குதிரை பண்ணை அமைத்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த ஹரிவராசன் என்பவர் முகநூல் மூலம் ஜெயாநாயர் மற்றும் அவரது கணவர் ஹரிதாசை ஆகியோரை தொடர்பு கொண்டு, பொள்ளாச்சி பகுதியில் குதிரைப்பண்ணை வைத்து இருப்பதாகவும், தங்களது பண்ணைக்கு வெளிநாட்டு குதிரைகளை கொடுத்தால் பராமரித்து விற்பனைக்கு தயார் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் தனது சகோதரர் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரும் குதிரை பண்ணை நடத்த உதவியாக இருப்பதாகவும் ஹரிவராசன் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஜெயாநாயர் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் 15 குதிரைகளை கொடுத்து பராமரிக்குமாறு கொடுத்துள்ளனர். மேலும் இதற்கு இரு தரப்பும் ஒப்பந்தமும் செய்துகொண்டதுடன்,குதிரைகளை பராமரிக்க தீவனம் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் 3 லட்ச ரூபாயினை ஜெயா நாயர் அனுப்பி வந்துள்ளார்.
இந்தநிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஜெயாநாயரின் குதிரை பண்ணைக்கு ஒரு குதிரையை விற்பனை செய்ய பொள்ளாச்சியை சேர்ந்தவர் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஜெயா நாயர் விசாரித்த போது பொள்ளாச்சி ஹரிவராசன்தான் குதிரையை விற்க முயல்வது தெரியவந்தது. தன்னுடைய குதிரையை , கேரளாவில் உள்ள தங்களது குதிரை பண்ணைக்கே விற்க முயன்ற போது ஹரிவராசனின் இந்த மோசடி தெரியவந்தது.
Also Read: உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்
மேலும் குதிரை பராமரிப்புக்கு அனுப்பிய பணத்தையும் பயன்படுத்தால் மோசடி செய்து இருப்பதுடன், சில குதிரைகளை விற்று மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. மொத்தம் 2.5 கோடி மோசடி செய்யப்பட்டு இருப்பதை அறிந்த ஜெயா நாயர் இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ,மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததுடன் ஹரிவராசன், அவருடைய அண்ணன் அரவிந்த கிருஷ்ணன், தந்தை சீனிவாசன் ஆகியோரை 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 11 குதிரைகளும் மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Horse riding, Local News, Tamil News