ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

7 மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்.. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளம்பெண்!

7 மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்.. சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளம்பெண்!

தாய்ப்பாலை தானமாக வழங்கிய பெண்

தாய்ப்பாலை தானமாக வழங்கிய பெண்

human milk bank | பல பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் இந்த சேவையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோயம்புத்தூரில் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி இளம்பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் ஒரு சில நேரங்களில் குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காது. அதே போல பிரசவத்தின் போது தாய் இரந்துவிட்டால் பிறக்கும் குழந்தைக்கு தாய் பால் கிடைக்காது. எனவே இந்த மாதிரியான சம்பவங்களை தவிர்க்கும் விதமாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் Human milk bank என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தாய்ப்பால் வங்கியில் விருப்பப்பட்ட பெண்கள் தாய்ப்பாலை தானமாக வழங்குவர். அந்த தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டம் கனியூரை சேர்ந்த சுந்து மோனிக்கா (29) என்ற பட்டதாரி இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 50 ஆயிரம் மில்லி தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கொடுத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க | மிகப்பெரிய சி.என்.சி இயந்திரத்தை உள்ளங்கை அளவில் உருவாக்கி கல்லூரி மாணவன் சாதனை..!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த செயலுக்காக இவர், ஆசிய மற்றும் இந்தியா புக் ஆஃப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து பேசிய மோனிகா, தாய்ப்பால் தானமாக வழங்குவதில் தனக்கு முதுகெலும்பாக இருந்தது தனது கணவர்தான் என்றும், அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பல பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் இந்த சேவையை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Breast milk, Coimbatore