முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / திருவிழாக்களில் பக்தர் வேடமிட்டு நகை திருடிய பெண் கைது... சொந்த ஊரில் ஆடம்பரமாக வாழ்ந்தது அம்பலம்..!

திருவிழாக்களில் பக்தர் வேடமிட்டு நகை திருடிய பெண் கைது... சொந்த ஊரில் ஆடம்பரமாக வாழ்ந்தது அம்பலம்..!

நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

Coimbatore Women Chain snatcher Arrest | கைது செய்யப்பட்ட பெண் திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோயில்  திருவிழாக்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சந்திரா தனது சசோதரியுடன் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.  பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது , கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் சந்திர பிரபா அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து சந்திர பிரபா சத்தம் எழுப்ப அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.பின்னர் அந்த பெண்ணை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செயின் பறித்த பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி சத்யா (32) என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள  கோயில்களில் திருவிழாவை பயன்படுத்தி செயின் பறித்து வந்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சத்யா திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோவில்களின்  திருவிழாக்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்களது சொந்த ஊரில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தற்போது நடைபெறும் கோனியம்மன் கோவில் திருவிழாவில் கைவரிசை காட்டத் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஆர் எஸ் புரம் போலீசார் சத்யா மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணைகள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: ஜெரால்ட்

First published:

Tags: Coimbatore, Crime News, Local News