ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

செங்கல் சூளைக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. அச்சத்தில் கோவை மக்கள்!

செங்கல் சூளைக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. அச்சத்தில் கோவை மக்கள்!

காட்டு யானையின் சிசிடிவி காட்சி

காட்டு யானையின் சிசிடிவி காட்சி

Coimbatore Elephant | அதிகாலையில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டு யானை செங்கல் உள்ளிட்ட பொருட்களை சூறையாடியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் வந்த காட்டு யானை அங்கிருந்த செங்கல் சூளைக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் தடாகம் , நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் காட்டு யானை  நடமாட்டம் அதிகளவு உள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக செங்கல்சூளைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அதிகாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை அங்கு இருந்த செங்கல் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த சின்னராஜ் என்பவரது தோட்டத்திற்குள் சென்ற யானை அங்கிருந்த வாழை,தென்னை  உள்ளிட்டவற்றையும் அங்கிருந்த போர்வெல்லையும் சேதப்படுத்தியது.

சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் இருந்து அந்த காட்டு யானை வேறுபகுதிக்கு சென்றது. இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: CCTV, Coimbatore, Elephant, Local News