Home /News /coimbatore /

காட்டில் காயத்தோடு சுற்றித்திரியும் காட்டு யானை... கும்கியின் உதவியோடு தேடும் பணி தீவிரம்

காட்டில் காயத்தோடு சுற்றித்திரியும் காட்டு யானை... கும்கியின் உதவியோடு தேடும் பணி தீவிரம்

காட்டுயானை

காட்டுயானை

'யானை சிறிது சோர்வுடன் இருந்தாலும் தொடர்ந்து வனத்திற்குள் நடந்து கொண்டே உள்ளது' - வனத்துறை அதிகாரிகள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவை ஆனைகட்டி கோபநாரி  வனப்பகுதியில் இரண்டாவது நாளாக உடல்நலம்  பாதிக்கப்பட்ட காட்டுயானையை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழக பகுதிகளில் 7 குழுவினரும் கேரள பகுதியில் 4 குழுவினரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட  காட்டு யானையை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம்  ஆனைகட்டி அருகே தமிழக கேரள  எல்லையில் கடந்த  ஞாயிற்று கிழமை 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. திங்கட் கிழமை மாலை வரை காட்டு  யானை ஆற்றின் நடுவில்  நின்று கொண்டு இருந்த  நிலையில், இந்த யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் இரு மாநில வனத்துறையினரும் யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் யானை வனத்திற்குள் சென்று விட்ட நிலையில் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல்  காட்டு யானையை தேடும் பணியில் கோவை மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரள  மாநில வனத்துறையினருடன் தகவல்களை பரிமாறிக்கொண்டு யானையை தேடும் பணியானது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. கோவை மண்டல வனத்துறை அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில் 5 வனசரகர்கள் உள்ளிட்ட  70க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானையை  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளான இன்று ஆனைகட்டி கோபநாரி பகுதிநில் காட்டு யானையை தேடும் பணியானது நடைபெற்று வருகின்றது. டிரோன் கேமரா மூலமும் காட்டுக்குள் சென்ற உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியானது நடைபெற்று வருகின்றது.

யானை


இதனிடையே  டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து கலீம் என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் டாப்சிலிப்பில் இருந்து முத்து என்கிற அரிசிராஜா என்கிற கும்கி யானையை அழைத்து வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.  காட்டுயானைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவோ அல்லது மரகுச்சிகள் குத்தியதாலோ காட்டு யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் யானை சிறிது சோர்வுடன்  இருந்தாலும் தொடர்ந்து வனத்திற்குள் நடந்து கொண்டே இருப்பதாகவும் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ALSO READ | ரூ.50 லட்சம் வரை பிச்சை எடுத்து அரசுக்கு வழங்கிய சமூக சேவகர்... மீண்டும் இலங்கை தமிழருக்காக உதவி

வனத்துறையினர் ஐந்து வனசரகர்கள் தலைமையில் 7 குழுக்களாக பிரிந்து கோபநாரி வனப்பகுதியில்  யானையை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இரு மருத்துவர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வன அலுவலர்கள் தெரிவித்தனர். இதே போல கேரள வனத்துறையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் கேரளா என இரு பகுதிகளிலும் மொத்தம் 11 குழுக்கள்  யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore, Elephant

அடுத்த செய்தி