Home /News /coimbatore /

அம்மன்குளத்தில் ஒரே அறையில் இரு கழிப்பிடம்.. காரணம் இதுதான்... கோவை மாநகராட்சி விளக்கம்

அம்மன்குளத்தில் ஒரே அறையில் இரு கழிப்பிடம்.. காரணம் இதுதான்... கோவை மாநகராட்சி விளக்கம்

கழிவறை

கழிவறை

கோவை அம்மன் குளத்தில் மாநகராட்சி சமுதாய கழிப்பிடம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை  அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. 

    கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே  கழிவறையினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து  பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

    அதில், அம்மன்குளம் பகுதியில் உள்ள கழிப்பிடம் 1995ல் கட்டப்பட்டது என்றும் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் கழிப்பட வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,’ சிறுவர்களுக்கு கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.

    இதையும் படிங்க: ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! - முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!

    இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு  செய்ய ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’ என மாநகராட்சி ஆணையர் மரு.மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore, Toilet

    அடுத்த செய்தி