Home /News /coimbatore /

இன்ஸ்டா காதல்.. உல்லாச வாழ்க்கை - கொள்ளையர்களாக மாறிய காதல் ஜோடி கோவையில் சிக்கினர்

இன்ஸ்டா காதல்.. உல்லாச வாழ்க்கை - கொள்ளையர்களாக மாறிய காதல் ஜோடி கோவையில் சிக்கினர்

காதல் ஜோடி கைது

காதல் ஜோடி கைது

Crime News : கோவையில் காதல் ஜோடியிடம் இருந்து கைப்பற்பப்பட இருசக்கர வாகனம்,  கூர்மையான ஆயுதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  கோவை வடவள்ளி  பகுதியில் புகுந்து வயதான முதியவரை கட்டிப்போட்டு தாக்கி பணம் , நகை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட காதல் ஜோடியை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த ஊர் பொதுமக்கள்

  கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன்‌கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (வயது 80), இவரது மனைவி ராஜம்மாள் (வயது 67)  இவர்களுக்கு மகன் மற்றும் மகள் இருவர்  உள்ளனர். மகன் சென்னையில்   சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகளை பெரிநாயக்கன்பாளையம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். வயதானவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

  இந்த நிலையில் ராஜம்மாள்  தன் கணவருக்கு உணவு கொடுத்து விட்டு மருமகள்  வருவாள் என கூறி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். மதியம் சுமார்‌ 2 மணியளவில் ஆண் ,பெண் இருவர் வந்து வீட்டில் தனியாக வெளியில் அமர்ந்து இருந்த பெரிய ராயப்பனிடம் தண்ணீர் கேட்டு உள்ளனர்.

  கொள்ளை முயற்சி:

  தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற இருவரும் அவரை மடக்கி பிடித்து இரு கைகளையும் கட்டி , வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம் நகைகளை தேடி வீட்டை அலாசியுள்ளளனர். நீண்ட நேரத்திற்கு  பின் வீட்டில் கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறி உள்ளனர்.

  அப்பொழுது முதியவரின் மருமகள் சென்னையில் இருந்து வந்தபொழுது வீட்டின் பின்பகுதியில் இருந்து வேறு இருவர் சந்தேகிக்கும் வகையில் வருவதை கண்டார். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்ட பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து நழுவ முற்பட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த  மருமகள் சங்கீதா அவர்களை பிடிக்க முற்பட்டுள்ளார். அவரை தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பினர். சங்கீதம் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

  விரட்டி பிடித்த பொதுமக்கள்:

  உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் விரட்டி உள்ளனர் .ஒரு புதரில் பதுக்கிய பெண்ணை லாவகமாக மடக்கிப்  பிடித்தனர். தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்ட  நபர் தானாக பொதுமக்களிடம் வந்து சேர்ந்தார். இருவருக்கும் ஊர்‌பொதுமககள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.  திருட்டில் ஈடுபட்டது குறித்து வடவள்ளி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  இன்ஸ்டா காதல் ஜோடி:

  போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப்பெண் திருச்சியை சேர்ந்த தேவராஜ் மகள் சென்பகவள்ளி (24) சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் என்பதும். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்து உள்ளனர்.  நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவரும் உல்லாசமாக வாழவும் , பல இடங்களுக்கு ஊர் சுற்றவும் பணம் தேவைப்பட்டது .

  Also Read: ரூ.100 கோடி மதிப்பிலான கொக்கைன்.. பேக், காலணிக்குள் மறைத்து கடத்தல் - சென்னை ஏர்போர்டில் அதிர்ந்த அதிகாரிகள்

  இவர்கள் கிராம பகுதியை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்து குறிப்பிட்ட வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்து வந்து உள்ளனர். கொள்ளை அடிக்க யூடியூப் பார்த்து அதற்கு சில கூர்மையான ஆயுதங்களான சுத்தி , கயிறு , பிளாஸ்டர் , உலி  உள்ளிட்டவை கொண்டு கொள்ளை அடித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குறிப்பாக பொம்மணம்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்துள்ள பெரிய ராயப்பன்‌ வீட்டை ஒரு வாரத்திற்கு முன்பாக திருட குறி வைத்து இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து கைப்பற்பப்பட இருசக்கர வாகனம்,  கூர்மையான ஆயுதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாநகர்‌ பகுதியில் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உள்ளனரா   என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: சுரேஷ் (கோவை)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News

  அடுத்த செய்தி