ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஆன்லைன் சூதாட்ட சாத்தானிடம் சிக்கிய கோவை.. தொடரும் விபரீதங்கள்.!

ஆன்லைன் சூதாட்ட சாத்தானிடம் சிக்கிய கோவை.. தொடரும் விபரீதங்கள்.!

இளைஞர் தற்கொலை

இளைஞர் தற்கொலை

Coimbatore | கோவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் நேற்று ஒரு இளைஞர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் அரங்கேறும் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த ஜூலை மாதம் காளிமுத்து என்ற விருதுநகரை சேர்ந்த காவலர் பொருட்காட்சி வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லை என தெரியவந்தது.

அதேபோல கடந்த வாரம் கிணத்துக்கடவு சேர்ந்த சல்மான் என்ற 22 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தால் 10 லட்ச ரூபாய் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல சிங்காநல்லூர் சேர்ந்தவரும் தற்கொலை செய்து கொண்டார். மேலும், கடந்தாண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காந்திபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, எல்வின் என்ற இளைஞரும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி கோவையைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் இதற்கு காரணம் ஆன்லைன் சூதாட்டம் என தெரியவந்தது. போலீசார், இதனை எப்படி தடுப்பது என தலைசுற்றி கொண்டிருக்கும் நிலையில், நேற்று மேலும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க | கொலை செய்ததை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் கெத்துகாட்டிய கொலையாளி.. தட்டித்தூக்கிய போலீஸ்!

கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர் .வி. எல் நகரை சேர்ந்த சங்கர் (29) இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது. இதில் லட்சகணக்கான பணத்தை இழந்து கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் ராம்நகர் சாஸ்திரி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார். தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Crime News, Local News, Online rummy