ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

மாதந்தோறும் மாமூல் வசூல்... கஞ்சா கும்பலுடன் தொடர்பு... கோவை எஸ்.ஐ. அதிரடி கைது!

மாதந்தோறும் மாமூல் வசூல்... கஞ்சா கும்பலுடன் தொடர்பு... கோவை எஸ்.ஐ. அதிரடி கைது!

கோயம்புத்தூர் எஸ்.ஐ.

கோயம்புத்தூர் எஸ்.ஐ.

Coimbatore sub inspector arrest | விசாரணையில், கஞ்சா கும்பலிடம் இருந்து மாமூல் வசூலித்து வருவதுடன்,  கஞ்சாவை புழக்கத்தில் விடவும்  உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரனை ரத்தினபுரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவைசங்கனூர் பகுதியில் கஞ்சா விற்ற சந்திராபாபு என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள் ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி ஆகியோரையும் போலீசார்  கைது செய்தனர்.

இவர்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்டகாலமாக கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து  வந்ததும், காவல் துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்தே இந்த விற்பனை நடத்து இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய மகேந்திரன் இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்ததுடன், மாதம்தோறும் மாமூல் வசூல் செய்து இருப்பதும் தெரியவந்தது.

2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை கோவையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு  பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த அவர், பின்னர் ஈரோடு மாவட்டத்தில்  சைபர் கிரைம் போலீசில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். எனினும் மகேந்திரன் இந்த கஞ்சா கும்பலின் பின்னணியில் இருந்து  செயல்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா கும்பலிடம் இருந்து மாமூல் வசூலித்து வருவதுடன்,  கஞ்சாவை புழக்கத்தில் விடவும்  உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரியவந்த நிலையில் ,ஈரோட்டில் இருந்த உதவி ஆய்வாளர் மகேந்திரனை ,கோவை இரத்தினபுரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Arrest, Cannabis, Coimbatore, Local News, Sub inspector