ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

Union Budget 2023 : பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள்..!

Union Budget 2023 : பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள்..!

சிறுகுறு தொழில் நிறுவனங்கள்

சிறுகுறு தொழில் நிறுவனங்கள்

Union Budget 2023 : மத்திய அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் குறுந்தொழில்களுக்கு என்று தனி தொழிற்பேட்டை மற்றும் தனி தொழிற்கடன் என பல்வேறு சிறப்பமசங்கள் இருக்கும் என தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.  இந்த நிறுவனங்கள் மின் மோட்டார்,பம்பு செட், வெட் கிரைண்டர், டெக்ஸ்டைல் உதிரிபாகங்களின் உற்பத்தியை நம்பி உள்ளன. ஆனால் தமிழகத்தில் உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் நெருக்கடியான சூழல்கள் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வட மாநிலத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட குறைந்த விலையில் உற்பத்தி செய்து தமிழகத்தில் சப்ளை செய்கிறார்கள்.இது அவர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதுடன் சிறுகுறு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மத்திய அரசு  உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தை கோவையில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பேசிய காட்மா தலைவர் சிவக்குமார், தமிழகத்தில் நெருக்கடியான சூழல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றவற்றால் அகமதாபாத், ராஜ்கோட் போன்ற பகுதிகளில் இருந்து நம்மை விட குறைந்த விலையில் உற்பத்தி செய்து இங்கு சப்ளை செய்கிறார்கள். இதனால் கோவையில் உள்ள சிறுகுறு தொழில்களுக்கு ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு  உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தை கோவையில் நிறுவ வேண்டும்.அந்த நிறுவனத்தில் சிறுகுறு தொழில்களுக்கு 50% ஆர்டர்களை கொடுக்க வேண்டும். அதேபோல ஆர்டர்கள் பெற தேவையான நடைமுறைகளை தளர்த்தி எளிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல மத்திய அரசு "ரா மெட்டீரியல் பேங்க்" உருவாக்கி மூலப் பொருட்களின் விலையை நிலையாக வைக்க வேண்டும் என தெரிவித்தார்,.

தொடர்ந்து பேசிய டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், ஜாப் ஆர்டர் செய்கின்ற குறுந்தொழில்களை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டியில் இருந்து விளக்களிக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் திரும்ப செலுத்த முடியாமல் உள்ளனர் . அதேபோல அந்த காலகட்டத்திற்கான வட்டி விகிதம் கூட குறைக்காமல் அபராதம் விதிக்கின்றனர். ஆகவே இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் இந்த பட்ஜெட்டில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் பேசிய தொழில் முனைவோர் பாலமுருகன், இந்த பட்ஜெட்டில் சிறு குறு தொழில்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோல ராணுவ தளவாட உற்பத்தி மையம் வரும்பொழுது சிறுகுறு தொழில்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வளர்ச்சி ஏற்படும். மேலும் ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைத்துக் கொடுத்தால் சிறுகுறு தொழில்கள் சிரமம் இல்லாமல் இயங்கும் என்றார்.

இப்படி கோவை மாவட்ட சிறுகுறு தொழில்களைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகள் இடம்பெற்று நடைமுறைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர்: ஜெரால்டு, கோவை.

First published:

Tags: Business, Coimbatore, Local News, Union Budget 2023