கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இதற்கெல்லாம் பாஜக கட்சியினர் அஞ்சப்போவதில்லை என அக்கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது, வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். நல்வாய்ப்பாக அது வெடிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள துணி கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்நிலையில் 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவர் மோகனுக்கு சொந்தமான கடையிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்து முன்னணியை சேர்ந்த தியாகு என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. ஆனால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் சிறிய அளவில் மட்டும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணக்குமார் ஆகியோரின் கார் மற்றும் ஆட்டோக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டீசல் நிரப்பிய கவர்களை தூக்கி வீசி சென்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற 5 சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேரை கைது விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் கூடுதலாக 4 கம்பெனி படைகளை சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பபட்டு, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!!
இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விட முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற அச்சுறுத்தல்களால், சமூக விரோதிகளுக்கு எதிரான தங்களின் சமூக பணி மேலும் வேகமெடுக்கும் என்று குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bjp party men, Coimbatore, Hindu Munnani