முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி.. நூலிழையில் தப்பிய காவலர்கள்.. நடந்தது என்ன?

கோவையில் போலீசாரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி.. நூலிழையில் தப்பிய காவலர்கள்.. நடந்தது என்ன?

கோயம்புத்தூர் துப்பாக்கி சூடு

கோயம்புத்தூர் துப்பாக்கி சூடு

Coimbatore Gun shoot : கொலை சம்பவத்தில் பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் இரண்டும் சீன நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் என்பது தெரியவந்துள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் கொலை வழக்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி  திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சத்திய பாண்டி என்ற நபரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். போலீசார் விசாரணையில் இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இருந்த முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக கூலிப்படையினர் நான்கு பேர் அரக்கோணம் மற்றும்  சென்னை நீதிமன்றங்களில்  சரணடைந்தனர். இவர்களில் சஞ்சய் ராஜா என்ற கூலிப்படை தலைவனை காவலில் எடுத்து கோவை தனிப்படை  போலீசார் விசாரித்தனர். அப்பொழுது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சீன நாட்டு தயாரிப்பு என்பதும், இரு துப்பாக்கிகள் அவரிடம் இருப்பதும்  தெரியவந்தது.

திடீரென துப்பாக்கியால் சுட்ட ரவுடி

இதனையடுத்து  சென்னையில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றொரு துப்பாக்கியை  கோவை சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் சஞ்சய் ராஜா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று காலை சஞ்சய் ராஜாவை தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதிக்கு  அழைத்துச் சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார். நல்வாய்ப்பாக போலீசாருக்கு  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து உதவிஆய்வாளர் சந்திரசேகர் தற்பாதுகாப்பிற்காக சஞ்சய் ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் சஞ்சய் ராஜாவின் இடது காலில்  துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த சஞ்சய் ராஜாவை காவல்துறையினர் பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர்  சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி கும்பலிடம் சீன மாடல் துப்பாக்கி எப்படி?

இந்நிலையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் இரண்டும் சீன நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சீனமாடல்  துப்பாக்கியை இந்த கூலிப்படைகும்பல் வாங்கியது எப்படி என்பது குறித்தும்,  கள்ள சந்தையில் சீன நாட்டு ஆயுதங்கள் விற்கப்படுகின்றனவா என்பது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சஞ்சய்ராஜா அனுமதிக்கபட்டுள்ள ரெட் ஜோன் பிரிவின் முன்பாக  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Crime News, Gun shoot, Tamil News