Home /News /coimbatore /

150ஆவது ஆண்டை கடக்க போகும் கோவை ரயில் நிலையம்.. சேவையை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

150ஆவது ஆண்டை கடக்க போகும் கோவை ரயில் நிலையம்.. சேவையை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ரயில் நிலையம்

கோவை ரயில் நிலையம்

Coimbatore Junction | மீட்டர் கேஜில் சென்று கொண்டிருந்த ரயில்களை மீண்டும் இயக்கி கோவையின் வளர்ச்சியை நிலை நிறுத்த வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை.!!

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை ரயில் நிலையம் 150வது ஆண்டை அடுத்த ஆண்டு கடக்க உள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி ரயில் சேவையை அதிகரிக்க வேண்டுமென பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பழமை வாய்ந்த ரயில் நிலையம் ஆன கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாகவும் , 'ஏ1’ அந்தஸ்து பெற்ற ரயில் நிலையமாகவும் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பயணிகள் வந்து செல்லும் கோவை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் எனவும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

    குறிப்பாக ரயில்வே பயன்பாட்டாளர்கள், அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள்,தொழிலமைப்பினர், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தென்னக ரயில்வேயிடம் கோவை வாழ் மக்களின் நீண்ட நாள் ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

    இதில் கோவையில் இருந்து தென் மாவட்டதிற்கு மீட்டர் கேஜில் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த ரயில்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.



    இதைத் தொடர்ந்து கோவை வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவையில் இருந்து மதுரைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே சேவைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரயில்வே துறை ஆர்வலர்கள் கோவையில் இருந்து தென் மாவட்டத்திற்கு மீட்டர் கேஜில் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த ரயில்களை  மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Also Read : லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் - மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்!

    இது குறித்து ரயில்வே பயன்பாட்டாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சதீஷ் கூறும்போது...

    கோயம்புத்தூர் ரயில் நிலையம் அடுத்த ஆண்டு 150 வது ஆண்டை கடக்க போகிறது. அதை சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். ரயில் போக்குவரத்து பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. கோயம்புத்தூர் ரயில் நிலையம் மற்ற எந்த ஊரில் இருந்து வந்து செல்வதாக இருந்தாலும் வசதியாக உள்ளது. ஆனால் இந்த வசதி போதாது. தமிழ்நாட்டில் இரண்டாவது நகரம் கோவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகவும் உள்ளது.


    கோவையில் இருந்து தென் தமிழகத்திற்கு மீட்டர் கேஜில் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த ரயில்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. திருச்செந்தூருக்கு ரயில் வசதி வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம் . தூத்துக்குடிக்கு ஒரு ரயில் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தென்காசியில் இருந்து கோவைக்கு ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். இந்த சேவைகள் கிடைத்தால் குறைந்த கட்டணத்தில் மக்கள் வந்து செல்ல முடியும். அதேபோல திண்டுக்கல்லில் இருந்து பேசஞ்சர் ரயில் ஒன்று காலை நேரத்தில் கோவை வந்து கொண்டிருந்தது இதில் வேலைக்கு செல்பவர்கள் பலர் பயனடைந்தனர். அந்த ரயிலையும் மீண்டும் இயக்க வலியுறுத்தி உள்ளோம்.

    Also Read : உயிருக்கு போராடி வரும் நித்தியானந்தா! இலங்கையில் தஞ்சமடைய ரணிலுக்கு கடிதம்!

    கோவையில் இருந்து மதுரைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை சமீபமாக துவங்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக அல்ல, இது போன்று ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கோவை ரயில் நிலையத்தில் ஒரு ஆண்டு கணக்கீட்டில் ஒரு கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். ஆகவே ரயில் சேவையையும் ரயில்வே ஸ்டேஷனையும் முன்னேற்ற ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.



    கோவையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள சூழலில் பண்டிகை காலங்களில் ரயில் சேவை கிடைக்காமல் தனியார் பேருந்துகளை நம்பி செல்லும் நிலை உள்ளது. இந்த இக்கட்டை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்துகள்  கட்டணத்தை மூன்று மடங்கு அதிகமாக வைக்கின்றனர். இதனால் கோவையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    Also Read : நைஜீரியா காதலிக்கு தாலிகட்டிய தமிழக இளைஞர்.. தமிழ்நாட்டின் மருமகளானார் நைஜீரிய பெண்!

    இது குறித்து கோவையில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது...

    எங்கள் சொந்த ஊருக்கு கோவையில் இருந்து செல்லும்பொழுது தொடர்வண்டி வசதிகள் கிடைப்பதில்லை. இதை பயன்படுத்தி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தற்போதுள்ள பொருளாதார சூழலில் 1500 ரூபாய் முதல் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகள் வசூல் செய்கின்றனர். வட இந்தியாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக அளவில் ரயில் வசதி உள்ளது. அதேபோல தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோவையில் இருந்து செல்ல ரயில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பேருந்துகளை நம்பி நாம் ஒரு பொருளாதாரத்துடன் சொந்த ஊருக்கு சென்றால் மீண்டும் வரும்பொழுது நகைகளை வைத்து தான் வரும் சூழல் ஏற்படுகிறது. ஆகவே தினமும் இரண்டு முறை கோவைக்கு தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயில்கள் வந்து சென்றால் மிகுந்த பயனாக இருக்கும் என்றார்.



    இப்படி தென் மாவட்டத்திற்கு செல்ல போதிய அளவு ரயில் வசதி இல்லாததால் பயணிகள் மட்டுமின்றி தொழில் முனைவோர்களும் தங்களின் உற்பத்தி பொருள்களை அனுப்ப பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் லாரி மூலமும், பேருந்துகள் மூலமும் பொருட்களை அனுப்புவதால் பொருட்களின் பாதுகாப்பு தன்மை குறைவதுடன் கட்டணமும் அதிகளவில் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.

    Also Read : லோன் ஆப் மோசடி - இயங்குவது எப்படி? - முழு ரிப்போர்ட்!

    இது குறித்து சிட்டிசன் வாய்ஸ் கன்ஸ்யூமர் இயக்கத்தின் பொறுப்பாளர் ஜெயராமன் கூறும் போது...

    ஐடி உள்ளிட்ட மற்ற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு பெங்களூர் செல்ல இரவு நேரத்தில் ரயில் வசதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல துறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மோட்டார் பம்ப் செட் தொழில்கள் மற்றும் காட்டன் தொழில்களில் அத்தியாவசியமான நகரமாக கோவை உள்ளது. இப்படி தொழில் நகரமான கோவையில் கூட்ஸ் ரயில் வசதி இல்லாததால் பாதுகாப்பு இல்லாத முறையில் பேருந்துகளில், லாரிகளில் தொழில் சார்ந்த பொருட்கள் அனுப்பப்படுகிறது. இந்த போக்குவரத்தில் கட்டணமும் அதிகமாக உள்ளது. ஆகவே புதிதாக ரயில்களை இயக்கி அதில் பார்சல்கள் கொண்டு செல்ல கேரேஜ் அமைத்தால் தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் பொருட்களும் பாதுகாப்பாக விரைவாக போகும். கட்டணமும் சாதாரணமாக இருக்கும்.
    அதேபோல சமீபமாக கோவையில் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியும் தயாரிக்கப்படுகிறது. மேலும் புதிதாக பல தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரயில்வே போக்குவரத்தை அதிகப்படுத்தினால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றார்.



    கோவை ரயில் நிலையம் 150வது ஆண்டை கொண்டாட உள்ள நிலையில் ரயில்வே பயனாளிகளின் கோரிக்கையை ஏற்று தென் தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் ரயில்வே சேவையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர்: ஜெரால்ட் - கோவை
    Published by:Selvi M
    First published:

    Tags: Coimbatore, Railway Station, Tamilnadu

    அடுத்த செய்தி