தமிழகத்தில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அறிவித்து வனத்துறை அறிவிப்பு..
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகளுக்கு பாகன்கள் நியமிக்கப்பட்டு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இந்த யானைகள் பல்வேறு வன பணிகளுக்கும் வனப்பகுதியை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்கவும் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழக மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் கும்கிகளின் அரசன் என்றே அழைக்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக அடங்காத யானைகளை கட்டுப்படுத்தி வந்த கலீமுக்கு 66 வயதாகிவிட்டது. அதனால் அதற்கு வனத்துறை பணி ஓய்வு அளித்துள்ளது. அதற்கு நடைபெற்ற பிரிவுபசார விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி என மாநிலத்தின் வனத்துறை உயர் அதிகாரிகள் கலீமை கவுரவப்படுத்தினர்.
செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant, Kumki, Pollachi, Tamil News