Home /News /coimbatore /

டிடிஃஎப் வாசன் அதிவேக ரைடு.. ஆடிப்போன ஜி.பி.முத்து - கேஸ் போட்ட கோவை போலீஸார்

டிடிஃஎப் வாசன் அதிவேக ரைடு.. ஆடிப்போன ஜி.பி.முத்து - கேஸ் போட்ட கோவை போலீஸார்

யூடியூபர்

யூடியூபர்

Coimbatore | டிக் டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை தனது சூப்பர் பாஸ்ட் பைக்கின் பின் இருக்கையில் அமர வைத்து, அதை வேகமாக இயக்கிய டிடிஎப் வாசனின் வீடியோ வைரலானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் பைக் சாகசங்களை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டு  2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவரது யூடியூப் பக்கத்தை  20 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

    தேசிய நெடுஞ்சாலைகளில் டிடிஎப் வாசன் அதிவேகத்தில் பைக்கில் செல்வதை பார்த்து, மற்றவர்களும்  பைக்கை அதிவேகமாக இயக்க கூடும் என்றும், இளைஞர்களுக்கு தவறான உதாரணமாக இருக்கும் எனவும்  வாசன் நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வந்தனர்.

    இருப்பினும் டிடிஎப் வாசன்  செல்லும் இடங்களில் அவ்வப்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். பொது இடங்களில் அவ்வப்போது இதுபோல இளைஞர்கள் திரள்வதால்  அவர் மீது ஏற்கனவே வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
    இந்த நிலையில் டிடிஎப் வாசன், டிக் டாக் பிரபலமான   ஜி.பி.முத்துவை தனது பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கி அவருக்கு பயத்தை காட்டினார்.

    இதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த  வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் கோவை மாநகர  காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிர்க்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் இரு சக்கர  வாகனத்தை இயக்கிய டி.டி.எப் வாசன் மீது கோவை  போத்தனூர் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also see...பள்ளி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

    பிரபல youtuber மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் YouTube பயன்படுத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Youtube

    அடுத்த செய்தி