ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

என்னயா பகல் கொள்ளையா இருக்கு..? மருத்துவமனை எதிரே நின்ற ஆம்புலன்ஸுக்கு ரூ.500 அபராதம் விதித்த போலீசார்! கோவையில் அதிர்ச்சி!

என்னயா பகல் கொள்ளையா இருக்கு..? மருத்துவமனை எதிரே நின்ற ஆம்புலன்ஸுக்கு ரூ.500 அபராதம் விதித்த போலீசார்! கோவையில் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸுக்கு அபராதம் விதிப்பு

ஆம்புலன்ஸுக்கு அபராதம் விதிப்பு

ஆம்புலன்ஸ் நிறுத்த இட வசதி தர வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை அரசு மருத்துவமனை எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  கோவை அரசு மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்குள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஆம்புலன்ஸ் நிறுத்த தற்போது போதிய இடம் இல்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்படுகிறது.

  இந்த நிலையில் இன்று வழக்கம் போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஆம்புலன்ஸை பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தினார். அப்போது வந்த போக்குவரத்து காவலர் 108 ஆம்புலன்ஸுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

  இதையும் படிங்க | கோவையில் ரிவர்ஸில் நடந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள்.. எதற்கு தெரியுமா?

  இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் எங்கு நிறுத்துவது என்று நிர்வாகத்திற்கு கேட்டனர்.தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்குள் தற்காலிகமாக நிறுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

  ஆனால் நோயாளிகளை கொண்டு செல்ல அது அசவுகரியமாக உள்ளது என கூறிய ஊழியர்கள் ஆம்புலன்ஸ் நிறுத்த உடனடியாக வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ambulance, Coimbatore, Kovai