Home /News /coimbatore /

பொதுமக்கள் கண்ணியத்துக்கு இழுக்கு.. கோவை 360 யூ டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு

பொதுமக்கள் கண்ணியத்துக்கு இழுக்கு.. கோவை 360 யூ டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு

யூ டியூப் சேனல் மீது வழக்கு

யூ டியூப் சேனல் மீது வழக்கு

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வந்த "கோவை 360 டிகிரி" என்ற யூடியூப் சேனல் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

    பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய வீடியோக்கள் சில நேரங்களில் தனி நபர் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் எல்லை மீறும் அளவுக்கு செல்கின்றன. சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையில் எதிர்பாலினத்தவரை தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழிநுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையும் படிங்க: Prank video எடுக்கும் யூட்யூபர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கோவை காவல்துறை!

    இந்நிலையில், பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்ட கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராங்க் வீடியோஸ் தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore, Police, Youtube

    அடுத்த செய்தி