Home /News /coimbatore /

முகக்கவசம் கட்டாயம்: ரூ.500 அபராதம்- கோவையில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை அறிவிப்பு

முகக்கவசம் கட்டாயம்: ரூ.500 அபராதம்- கோவையில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை அறிவிப்பு

கோயம்புத்தூரில் காவல்துறை அறிவிப்பு

கோயம்புத்தூரில் காவல்துறை அறிவிப்பு

கோவையில் பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்புவிடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இல்லை எனில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என  காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தினசரி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100யை கடந்தது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் இல்லங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க பொது மக்கள் முக கவசம் அணிந்த பின்னரே அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார்- உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் பா.ஜ.கவினர் புகார்

மேலும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் செல்லும் பொது மக்கள்  கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: Coimbatore, CoronaVirus

அடுத்த செய்தி