முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ஆன்லைன் சூதாட்டம்: கோவையில் மேலும் ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டம்: கோவையில் மேலும் ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை

கோவை அரசு மருத்துவமனை

Coimbatore Online Rummy Sucide | ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இளைஞர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் பிஎஸ்சி ஐடி படித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர், செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் இவருக்கு தலைவலி மற்றும் பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Local News