ஆன்லைன் விளம்பரத்தில் காரை விற்க முயன்றவரை கத்தியால் குத்தி காரை கடத்தி சென்ற சம்பத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி மாநகரைச் சேர்ந்த பாலச்சந்தர் மகன் வெங்கடேஷ் (30).இவர் தனது காரை சமூக வலைதள செயலியான ஓஎல்எக்ஸ் மூலம் விற்பனை செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளம்பரம் செய்துள்ளார். இதனைக் கண்ட ஒருவர் நேற்று வெங்கடேசனின் செல்போனுக்கு அழைத்து நீங்கள் அளித்திருந்த விளம்பரத்தை பார்த்தோம்.உங்களது காரை வாங்க விருப்பம் என்று கூறி பேசியுள்ளார்.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உங்களது காரை நேரில் பார்க்க நாங்கள் புறப்பட்டு விட்டோம் என்றும் சத்தி சாலையில் உள்ள ப்ரோசோன் மால் வளாகம் முன்பு வந்து மீண்டும் வெங்கடேஷ்க்கு போன் செய்துள்ளனர். அப்போது வெங்கடேஷ் கார் வாங்க வந்ததாக தெரிவித்தவர்கள் இடம் தனது முகவரியை கூறியுள்ளார்.
பின்னர் கணபதி மாநகரில் உள்ள வெற்றி விநாயகர் நகரில் இருக்கும் வெங்கடேசின் ஆட்டோ கேரேஜ்க்கு இருசக்கர வாகனத்தில் வந்த அந்த 2 நபர்கள் வந்தனர். காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி பார்க்க ஒப்புக்கொண்ட வெங்கடேஷ் தானும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்துள்ளார். காரை சிறிதூரம் ஓட்டிப் பார்த்தவர்கள் எங்கள் அண்ணனிடம் கேட்டுவிட்டு காரை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.
சிறிது நேரம் கழித்து செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் காரை ப்ரோசோன் மால் முன்பு கொண்டு சென்று எங்கள் அண்ணனுக்கு காட்ட வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை நம்பிய வெங்கடேஷ் அந்த நபர்களை தனது காரில் ஏற்றினார். அதே சமயத்தில் இளைஞர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை வெங்கடேசின் கேரேஜ் முன்பு நிறுத்தினர்.
ப்ரோசோன் மால் நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பின்னிருக்கையில் அமர்ந்த இருவரில் ஒருவர் காரை ஓட்டி வந்த வெங்கடேஷை பண்ணாரி அம்மன் கோயில் அருகே சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் நிலைகுலைந்த வெங்கடேஷ் காரில் இருந்து கீழே குதித்துள்ளார். அதே சமயத்தில் வண்டி போக போக உடனே வண்டிக்குள் இருந்த அந்த மர்ம இளைஞர்கள் வெங்கடேஷின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் படுகாயம் அடைந்த வெங்கடேசுக்கு கழுத்துப் பகுதியில் இரண்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வெங்கடேசை கணபதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காரை திருடி சென்ற நபர்கள் கோவில்பாளையம் சந்தைப்பேட்டை ,கொண்டையம் பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை ஓரம் நடந்து சென்றவர்கள் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள். இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதில் நான்குக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் காரை விலைக்கு வாங்குவது போல் நடித்து காரை திருடி சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதே போல கோவில்பாளையம் காவல் நிலையத்திலும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Coimbatore, Crime News, Local News