முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை கல்லூரிக்குள் உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறி ஓடிய மாணவிகள்.. ஷாக் வீடியோ!

கோவை கல்லூரிக்குள் உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்.. பதறி ஓடிய மாணவிகள்.. ஷாக் வீடியோ!

கோவை

கோவை

Coimbatore north indians | அடுத்தடுத்து வெளியாகும் வடமாநிலத்தவர்களின் தாக்குதல் வீடியோக்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Sulur

கோவை மாவட்டம் சூலூரில் தனியார் கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்த வடமாநில தொழிலாளர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியதாக பகிரப்பட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குள் வடமாநிலத்தவர்கள் உருட்டுக்கட்டைகளுடன் வந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டினில் தினமும் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேண்டினில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை கண்ட மாணவர்கள் கேண்டினில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

' isDesktop="true" id="891378" youtubeid="szanLCdwucg" category="coimbatore">

இதன் தொடர்ச்சியாக வடமாநிலத்தொழிலாளர்கள் சிலர் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரிக்குள் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: ஜெரால்டு, கோவை.

First published:

Tags: Coimbatore, Local News