Home /News /coimbatore /

ஒரே மாதத்தில் 3 உயிர்களை பறித்த கோவை புதிய மேம்பாலம்.. விபத்து பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை

ஒரே மாதத்தில் 3 உயிர்களை பறித்த கோவை புதிய மேம்பாலம்.. விபத்து பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை

கோவை- புதிய மேம்பாலம்

கோவை- புதிய மேம்பாலம்

Coimbatore new bridge | கோவை ராமநாதபுரத்தில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு ஒன்றரை மாதத்திற்குள் மூன்று பேர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், பாலத்தில்  விபத்து ஏற்படும் வளைவான பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
கோவை  இராமநாதபுரத்தில் ரூ.238 கோடி மதிப்பில்  மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த ஜூன் 11 ம் தேதி திறக்கப்பட்டது. கோவை-திருச்சி சாலையில் பங்குசந்தை அலுவலகத்தில் இருந்து ரெயின்போ பேருந்து நிறுத்தம் வரை 3.15 கி.மீ தூரத்திற்கு இந்த  பாலம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட மறுநாளே  இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கட்டுப்பாட்டை  இழந்து தவறி விழுந்து இறந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் மட்டும்  இரண்டு பேர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.  குறிப்பாக சுங்கம் பகுதியில் பாலத்தின் வளைவான பகுதியில் இந்த விபத்து தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவது அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வளைவான இடங்கள் மற்றும் பாலத்தில் இருந்து  உக்கடம் புறவழிச்சாலைக்கு பிரியும்  இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

Also see... தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம்.. திருவிழாக்கோலம் பூண்டது

மேலும் வளைவான பகுதியில் இரும்பு தடுப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் பாலத்தின் மேல் விபத்து ஏற்படும் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Longest Bridge

அடுத்த செய்தி