ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

போலீஸ் ஸ்டேஷன் தான் போறேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கத்தியுடன் சென்ற கணவன் - சிசிடிவி காட்சிகள்

போலீஸ் ஸ்டேஷன் தான் போறேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கத்தியுடன் சென்ற கணவன் - சிசிடிவி காட்சிகள்

மனைவியை கொலை செய்த கணவன் கத்தியுடன் நடந்து செல்லும் படம்

மனைவியை கொலை செய்த கணவன் கத்தியுடன் நடந்து செல்லும் படம்

Coimbatore | கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில், செவிலியராக பணிபுரியும் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் கையில் கத்தியுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நான்சி (32). இவர்  பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு  மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் , இவரது கணவர்  வினோத்தும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி வினோத் சண்டையிட்டு வந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை குப்புசாமி நாயுடு  மருத்துவமனைக்கு சென்ற வினோத் மனைவி நான்சியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது கோபமடைந்த வினோத் மனைவி நான்சியின் உடலில் பல  இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து தப்ப முயன்ற போது ஊழியர்கள் அவரை பிடித்தனர். அவரது உடலிலும் கத்தியால் காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில்  கடந்த 3 ம் தேதி செவிலியர்  நான்சியை கத்தியால் குத்தி கொன்று விட்டு மருத்துவமனையில் இருந்து கத்தியுடன் வினோத் வெளியேறும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் வினோத் டிப் டாப் உடையணிந்தபடி கொலை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு கையில் கத்தியுடன் வெளியேறுவதும், அவரை மருத்துவமனை பாதுகாவலர்கள் பின் தொடர்ந்து செல்வதுமான காட்சிகள் வெளியாகியுள்ளது.

Also see... ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை - கமல்ஹாசன்

அப்போது காவல் நிலையத்திற்குதான் செல்கின்றேன் என தன்னை தடுக்க முயன்றவர்களிடம் அவர் சொல்வதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

First published:

Tags: Coimbatore, Crime News, Husband Wife, Kovai, Murder case