Home /News /coimbatore /

பதிவு எண் இல்லாத காரை பயன்படுத்தி வரும் கோவை மேயர்!

பதிவு எண் இல்லாத காரை பயன்படுத்தி வரும் கோவை மேயர்!

மேயர் கல்பனாவின் கார்

மேயர் கல்பனாவின் கார்

கோவை மத்திய சிறையில் நடைபெற்ற வ.உ.சி 151 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர், பதிவு எண் இல்லாத அந்த காரையே பயன்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசு வாகனத்தை பதிவு எண் இல்லாமல் பயன்படுத்தி வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா. இவருக்கு சமீபத்தில் மாநாகராட்சி சார்பில்  புதிய இன்னோவா வாகனம் வாங்கப்பட்டது. இந்த புதிய வாகனத்திற்கு இன்னும் பதிவு எண் வராத நிலையில், இந்த வாகனத்தை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார் மேயர் கல்பனா.

இன்று கோவை மத்திய சிறையில் நடைபெற்ற வ.உ.சி 151 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர், பதிவு எண் இல்லாத அந்த காரையே பயன்படுத்தியுள்ளார். பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் மக்கள் பிரதிநிதியே இவ்வாறு செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வாகனம் வாங்கியவுடன்  போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், நம்பர் பிளேட் போக்குவரத்து துறையில் இருந்து வந்தவுடன் உடனடியாக பொறுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Coimbatore, Government, Mayor

அடுத்த செய்தி