முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ‘உன் தம்பி இருக்கானா இல்ல செத்துட்டானான்னு பார்’ - மனைவியின் சகோதரரை கொன்றுவிட்டு போன் செய்த கணவர்

‘உன் தம்பி இருக்கானா இல்ல செத்துட்டானான்னு பார்’ - மனைவியின் சகோதரரை கொன்றுவிட்டு போன் செய்த கணவர்

கைதான பாலசுப்பிரமணியம்

கைதான பாலசுப்பிரமணியம்

Coimbatore Crime News : கோவையில் குடிபோதையில் மனைவியின் தம்பியை குத்திகொன்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவருக்கு  தங்கமாரி மற்றும் செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர். இருவரும் திருமணமானவர்கள். மரவேலை செய்து வரும் மணிகண்டன் தனது தாயாருடன் கோவில்மேடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி  குடும்பத்தகராறு காரணமாக  தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்துள்ளார். தங்கமாரி இதனை தனது அம்மாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனை அறிந்த மணிகண்டன் 23-ம் தேதி  குடிபோதையில் தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தங்கமாரி சகோதரர் மணிகண்டனை மதுபோதையில் வந்து பேச வேண்டாம் என வீட்டிற்கு போக சொல்லியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சத்தம் எழுப்பியதை தொடர்ந்து தங்கமாரி தனது மற்றொரு சகோதரி செல்வியின் கணவர் பாலசுப்ரமணியத்திற்கு தகவல் கொடுத்தார்.

மேலும் மணிகண்டனை கட்டுப்படுத்த பாலசுப்பிரமணியத்தை நேரில் செல்ல அவரது மனைவி செல்வி வலியுறுத்தினார். இதற்கு பாலசுப்ரமணியம் மறுக்கவே மனைவி செல்வி பயந்து விட்டாயா என கேட்டுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்ட பாலசுப்பிரமணியம் நேற்று அதிகாலை மது போதையில்நேராக மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் இரும்பு கம்பியால் மணிகண்டனின் உடலில் பல்வேறு இடங்களில் தாக்கி குத்திவிட்டு அங்கிருந்து கணுவாய் அருகே தலைமறைவானார்.

பின்னர் அவரது மனைவி செல்விக்கு போன் செய்து ’உன் தம்பி இருக்கிறானா இல்லை செத்துட்டானா போய் பார்’  என பேசி போனை துண்டித்து விட்டார். இந்த நிலையில் தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர்.

செய்தியாளர்: ஜெரால்டு  (மதுரை)

First published:

Tags: Coimbatore, Crime News, Murder, Tamil News