முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது ஏன்.. அதன் வேலை என்ன?

மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது ஏன்.. அதன் வேலை என்ன?

மக்னா யானைக்கு ரேடியோ காலர்

மக்னா யானைக்கு ரேடியோ காலர்

Coimbatore elephant | வனத்துறையால் பிடிப்பட்ட மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யானை கண்காணிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட மக்னா யானக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு பகுதியில் சுற்றி நேற்று கோவை பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது.  இதனை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் யானையை பிடிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானை உதவியுடன் பிடித்தனர்.

இந்த யானையை கண்காணிக்கும் விதமாக அதற்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் ஐந்து கிலோ வரை எடை கொண்ட எலிபாண்ட் காலர் என்ற இந்த ரேடியோ காலர் வனத்துறையினரால் யானைக்கு பொருத்தப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த யானையை வனத்தில் விட்டாலும் எளிதாக கண்காணிக்க முடியும்.

யானையை தெங்குமராடா மங்கள்பட்டு என்ற பகுதியில் விடுகின்றனர். அப்போது யானை வனத்தை விட்டு வெளியே வரும்பட்சத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் எளிமையாக கண்காணிக்கப்பட்டு மீண்டும் வனத்திற்குள் விரட்ட முடியும்.

இந்த ரேடியோ காலரின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகும். அந்த ரேடியோ காலரை ரிஜிஸ்டர் செய்து வைத்தால் ஒவ்வொரு 15 நிமிடம், அரை மணி நேரம் அப்டேட் கிடைக்கும்.

மேலும் லிங்கில் கிளிக் செய்தால் சாட்டிலைட் மூலம் அதன் நடவடிக்கைகள் தெரியும். சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ரேடியோ காலர் ஆயுட்காலம் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யானையை ரேடியோ காலர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரேடியோ காலர் யானையை விரட்ட பெரும் உதவியாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.

First published:

Tags: Coimbatore, Elephant, Local News