முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை மதுக்கரையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் ஒருவர் பலி..

கோவை மதுக்கரையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் ஒருவர் பலி..

விபத்துக்குள்ளான வாகனம்

விபத்துக்குள்ளான வாகனம்

Coimbatore News : கோவை மதுக்கரை அருகே சாலை ஓரத்தில் இருந்த கடையின் மீது கட்டுப்பாட்டை இழந்து லாரி மோதி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madukkarai, India

கோவை மதுக்கரை அருகே சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி பின்னர் சாலை ஓரத்தில் இருந்த கடையின் மீது மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, இன்று காலை கோவை மதுக்கரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே சென்று  கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

அதிகபாரத்துடன் இருந்ததால் அடுத்தடுத்து  இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : ஜெரால்ட்  ( கோவை)

First published:

Tags: Accident, Coimbatore, Local News, Tamil News