ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஆட்டோ நூலகம் - குற்றங்களை குறைக்க கோவை போலீஸ் கமிஷனரின் புதிய முயற்சி

ஆட்டோ நூலகம் - குற்றங்களை குறைக்க கோவை போலீஸ் கமிஷனரின் புதிய முயற்சி

திட்டத்தை தொடங்கிவைத்து ஆட்டோவில் பயணிக்கும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

திட்டத்தை தொடங்கிவைத்து ஆட்டோவில் பயணிக்கும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

மாநகரம் முழுவதும் இரண்டாயிரம் ஆட்டோக்களில் மினி நுாலகம் அமைக்கப்படும். மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும் – கோவை காவல் ஆணையர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் முதல்முறையாக ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கவும், குற்றங்களை குறைக்கவும் "லைப்ரரி ஆன் வீல்ஸ் " என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து  வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும், காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன்  தொடங்கி வைத்தார்.

இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள்  புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? சேலத்தில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

துடியலூரைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோவில், பயணிகளுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள்,சானிடைசனர் மற்றும் சாக்கெட்லெட் பெட்டியுடன் வடிவமைக்கபட்டுள்ளது.

இதனை துவக்கி வைத்து பேட்டியளித்த காவல்  ஆணையர் , பாலகிருஷ்ணனன்,  பயணிகள் நலன் கருதி, வாசிப்புதிறனை அதிகரிக்க மாநகரம் முழுவதும் இரண்டாயிரம் ஆட்டோக்களில்  மினி நுாலகம் அமைக்கப்படும் எனவும் , மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்பு குற்றங்களை குறைக்கவும் உதவும் என தெரிவித்த அவர்,  கால்டாக்ஸிகளில் இது போல நூலகம் தொடங்கமுயற்சி செய்யப்படும்  எனவும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர் – குருசாமி, கோவை

Published by:Musthak
First published:

Tags: Coimbatore