ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.. கோவையில் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

coimbatore : இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் கணவர் போலீசில் புகார் அளித்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

திருமணமான 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான கட்டிட தொழிலாளி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் வசித்துவருகிறார். இவரது மனைவி சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது அங்கு வேலை செய்து வரும் 28 வயது இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது, கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனியாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் விஷயம் ஒரு நாள் கணவருக்கு தெரியவந்தது. இதனைகேட்டு ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு தூங்க சென்ற கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறுநாள் எழுந்து பார்த்த கணவர் மனைவி வீட்டில் இல்லாததையடுத்து பல இடங்களில் தேடி சென்றார். தொடர்ந்து அவர் விசாரித்த போது, உடன் வேலை செய்தவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் ச்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த கணவர், இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், ஓட்டம் பிடித்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Extramarital affair, Local News