Home /News /coimbatore /

போலி நகைகளை கணக்கு காட்டி ரூ.40 லட்சம் மோசடி.. கோவையில் தனியார் அடகு நிறுவன பெண் நிர்வாகி கைது...

போலி நகைகளை கணக்கு காட்டி ரூ.40 லட்சம் மோசடி.. கோவையில் தனியார் அடகு நிறுவன பெண் நிர்வாகி கைது...

போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் கோவை குனியமுத்தூர் தனியார் நிறுவன தலைவர் கைது...

போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் கோவை குனியமுத்தூர் தனியார் நிறுவன தலைவர் கைது...

Coimbatore | கோவை குனியமுத்தூர் ICL fincorp நிறுவனத்தில் போலி தங்க நகைகளை வைத்து பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அந்நிறுவன கிளை தலைவர் கார்த்திகா என்பவர் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICL fincorp நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையின் தலைவராக இருந்த  கார்த்திகா, மேலாளர் சரவணன், உதவி மேலாளர் ஆகியோர் போலி தங்க நகைகளை வைத்து மோசடி செய்தனர். 598 கிராம் போலி தங்க நகைகளை வைத்து  அதற்கு ஈடாக 40.80 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தணிக்கையில்  தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த கிளையின்  உதவி மேலாளர் சத்யா என்பவர் கைது செய்யப்பட்டார். குனியமுத்தூர் கிளையின் தலைவர் கார்த்திகா, மேலாளர் சரவணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் தலைமுறைவாக இருந்த கார்த்திகாவை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Also see...சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே தலைமறைவான  சரவணன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, Coimbatore, Crime News

அடுத்த செய்தி