Home /News /coimbatore /

காட்டு யானையை பிடிக்க வந்த அரிசிராஜாவுக்கு மதம் பிடித்தது.. டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பி வைப்பு

காட்டு யானையை பிடிக்க வந்த அரிசிராஜாவுக்கு மதம் பிடித்தது.. டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பி வைப்பு

காட்டு யானையை பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடிப்பு

காட்டு யானையை பிடிக்க வந்த கும்கி யானைக்கு மதம் பிடிப்பு

Coimbatore | கோவை ஆனைகட்டி அருகே காயமடைந்த காட்டு யானையை பிடிக்க அழைத்து வரப்பட்ட கும்கி யானை அரிசி ராஜாவிற்கு மதம் பிடித்ததால் மீண்டும் டாப்சிலிப்  முகாமுக்கு அனுப்பப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது. கடந்த 15ம் தேதி முதல் காயமடைந்த  காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் காட்டு யானையை பிடிக்க டாப்ஸ்லிப்  யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் கலீம் மற்றும் அரிசிராஜா ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14  நாட்களாக இரு கும்கி யானைகளும் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்கி யானை அரிசிராஜாவிற்கு மதம் பிடித்த நிலையில் இரு நாட்களாக கட்டளைகளுக்கு கீழ் படியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானை அரிசிராஜாவை  நேற்று மாலை  பொள்ளாச்சி டாப்சிலிப்  யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

வனத்துறை லாரி மூலம் கும்கி யானை அரிசிராஜாவை ஏற்றி பொள்ளாச்சி டாப்ஸ்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே இன்று 12 நாட்களுக்குப் பிறகு காயமடைந்த காட்டு யானை பனப்பள்ளி வனப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காயம் அடைந்த அந்த காட்டு யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர், வனத்துறை மருத்துவ குழு மூலம் அதற்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Also see... சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது...

சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழு வனத்திற்குள் விரைந்துள்ள நிலையில் கும்கி யானை கலீம்  உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளிக்க  வனத்துறை அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Elephant, Kumki

அடுத்த செய்தி