காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரவீன் தியாகராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையை சார்ந்தவர் பிரவீன் தியாகராஜன். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.காம் 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், தற்போது தமிழ்நாடு U-19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிரவீன் கூறுகையில், “நீலகிரி மாவட்டம் உதகையில் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தேன். பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இருந்ததால், என்னுடன் விளையாடியவர்கள் என்னை ஊக்கப்படுத்தியதால் தான் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார். அனைவரும் முயற்சி செய்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம், கனவை நோக்கி பயணப்பட்டால் வெற்றி எளிது என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், சென்னை, ஹைதராப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விளயாடியிருப்பதாகவும், தேசிய அளவில் சாதிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரவீன் தியாகராஜன். சிறிய வயதில் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தான் ஆல் ரவுண்டராக உள்ளதால் அனைவரையும் ஒருங்கிணைத்து அணியின் வெற்றிக்கு பாடு படுவேன் எனவும் தெரிவித்தார்.
Must Read : மின் கட்டண உயர்வு - ஆகஸ்ட் 22ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
முன்னதாக தமிழக இளையோருக்கான அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பிரவீனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் பல்கலைக்கழகம் சார்பில் செய்து தரப்படும் எனவும் வேந்தர் பால் தினகரன் தெரிவித்தார்.
செய்தியாளர் - சுரேஷ், தொண்டாமுத்தூர்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.