ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

'அண்ணன் தம்பியா இருக்கோம்’ - கோவை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்கள்.. சால்வை அணிவித்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர்!

'அண்ணன் தம்பியா இருக்கோம்’ - கோவை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்கள்.. சால்வை அணிவித்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர்!

கோயில் நிர்வாகத்தினரை சந்தித்த ஜமாத்தினர்

கோயில் நிர்வாகத்தினரை சந்தித்த ஜமாத்தினர்

கார் வெடிப்பு நடந்த சம்பவத்தையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு கோட்டைமேட்டு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வருகை தந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கார் வெடிப்பு நடந்த சம்பவத்தையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வருகைதந்த கோட்டைமேட்டு பகுதியைச் சேர்ந்த  பள்ளி வாசல் நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

  கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலின் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், கோட்டைமேடு பகுதியை சுற்றியுள்ள பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உலாமாக்கள் சம்பவ பகுதியை பார்வையிட்டு கோயில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

  இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

  கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் விவரம் மற்றும் இறந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்தனர்.

  இதைத்தொடர்ந்து மாநகர காவல் துறை சார்பில் இஸ்லாமிய ஜமாத்துகள், மற்றும் இந்து இயக்கங்களிடம் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து இன்று கோட்டைமேட்டை சுற்றியுள்ள மூன்று பள்ளிவாசல்களின்உலாமாக்கள் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் ஆலோசனை மற்றும் கலந்துரையாடினர்.அப்போது கோவிலுக்குள் வந்து பேசிய உலாமாக்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில்  தேநீர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 20 நிமிடம் சம்பவம் தொடர்பாகவும் இரு மதங்கள் ஒற்றுமையாக இருப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.இதைத் தொடர்ந்து 16 உலாமாக்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  இதையும் படிங்க : சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

  இதைத் தொடர்ந்து சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இதாயத்துல்லா பேசும்போது ''சமூகங்களுக்கு இடையில் பதட்டமான சூழல் உள்ளது.நாங்கள் ஏழு தலைமுறையாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம்.200 ஆண்டு காலத்திற்கு மேலாக நாங்கள் வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இங்கு வாழ்ந்து வருகிறோம்.கார் வெடிப்பு சம்பவத்தை கண்டிக்கிறோம்.நாங்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம்.அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்.எந்தவிதமான அரசியல் மற்றும் மத பூசல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தோடு இன்று கோவிலுக்குள் வந்து நிர்வாகிகளை சந்தித்துள்ளோம்.கலந்துரையாடலில் எங்களை வரவேற்றார்கள்.கோவிலில் நீண்டகாலமாக இருப்பவர்கள் சிறுவயதில் இந்தப் பகுதியில் இருந்தது, கோவில் விழாக்களின் போது இஸ்லாமியர்கள் கடையை மூடி ஒத்துழைப்பு கொடுத்தது போன்றவற்றை கோவிலை சேர்ந்தவர்கள் எங்களிடம் நினைவுப்படுத்திக் கொண்டனர்.எங்கள் மசூதி நிகழ்வுகளுக்கு அவர்களும் வருவார்கள்.இந்து முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.அரசியல் தலைவர்கள் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டனர்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Kovai