கோவை ஈஷா வளாகத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஈஷா யோகா மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈஷா யோகா மையத்தில் நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு நடைபெற உள்ளது. இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.sadhguru.org என்ற லிங்க்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இலவசமாக பங்கேற்க விரும்புவோர் ‘தாமிரபரணி’ என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, இ-மெயில் முகவரிக்கு இ-பாஸ் அனுப்பி வைக்கப்படும்.
வரும் 18-ம் தேதி ஈஷாவுக்கு வரும்போது, மலைவாசல் அருகே நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் இந்த இ-பாஸை காண்பித்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். இவ்விழா மாலை 6 மணிக்கு தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும்.
லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசனக் காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore