ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கும்மிருட்டு.. சைக்கிளில் சென்ற கணவன், மனைவி... பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

கும்மிருட்டு.. சைக்கிளில் சென்ற கணவன், மனைவி... பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

விபத்து

விபத்து

Coimbatore accident | கணவர் மனைவி இருவரும் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை ஆலாந்துறை அருகே அரசு பேருந்து மோதி சைக்கிளில் பணிக்குச் சென்ற கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37) இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பூளுவப்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில்  ராஜேந்திரன், தேவி இருவரும் பணிக்குச் நேற்று காலை சிறுவாணி சாலையில் சைக்கிளிலில் சென்றுள்ளனர்.

அப்போது ஆலாந்துறை அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று அவர்கள்மீது  மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய ராஜேந்திரன், தேவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பேருந்துடன் சரணடைந்தார்.

இதையடுத்து இந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: வைரபெருமாள் அழகுராஜன், தொண்டாமுத்தூர்.

First published:

Tags: Accident, Coimbatore, Local News