ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம்.. ஹோட்டல் பவுன்சரான மற்றொரு பாஜக நிர்வாகி கைது

கோவையில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம்.. ஹோட்டல் பவுன்சரான மற்றொரு பாஜக நிர்வாகி கைது

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளரான ரெயின்போ ரமேஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ரேஸ்கோர்ஸ் பப்பிஸ் ஹோட்டலில் பாஜக சிறுபான்மை பிரிவு  நிர்வாகி ஜான்சன் தாக்கப்பட்ட விவகாரத்தில் , திடீர் திருப்பமாக அந்த ஹோட்டலில் பவுன்சராக பணியாற்றி வந்த பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளரான ரெயின்போ ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பப்பீஸ் ஹோட்டலில் கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன், தனது மகன் டேவிட் உள்ளிட்ட சிலருடன் சென்றார். அங்கு நடைபெறும் இரவு விருந்தில் ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதி என கூறியதால் அங்கிருந்த ஊழியர்களுடன் ஜான்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது  ஜான்சன் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும், ஹோட்டலில் இருந்த பவுன்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான ஹோட்டல் மேலாளர் விஷ்ணு பாரதி அளித்த புகாரின் பேரில் ஜான்சன் உட்பட நான்கு பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார்  வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த ஜான்சன் மற்றும் அவருடன் வந்தவர்களை பப்பிஸ் ஹோட்டல் மேலாளர் விஷ்ணு பாரதி முன்னிலையில்   பவுன்சர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. இந்நிலையில் சம்பவம் நடந்து இரு வாரங்களுக்கு பின்னர்  ஜான்சன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதையும் படிங்க: மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை

அதில் தனது மகன் டேவிட் பிறந்த நாளை கொண்டாட  ஹோட்டலுக்கு வந்ததாகவும், 2500 ரூபாய் செலுத்திய நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் இடத்தை காட்ட மறுத்ததாகவும், அதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னையும் தனது மகனையும் தாக்கியதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் தனது மகன் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மோதிரத்தை ஹோட்டல் நிர்வாகத்தினர் பவுன்சர்கள் மூலம் பறித்துக் கொண்டதாகவும் புகாரி்ல் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பப்பீஸ்  ஹோட்டல் மேலாளர் விஷ்ணு பாரதி மற்றும் 4  பவுசர்கள் மீது வழிப்பறி, கொலை மிரட்டல்,காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்கள் மூலம் காயம் ஏற்படுத்துதல்,ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளரான ரெயின்போ ரமேஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். ரெயின்போ ரமேஷ் , பப்பீஸ் ஹோட்டலில் பவுன்சராக பணியாற்றி வந்த நிலையில்,  ஜான்சன் அளித்த புகாரின் அடிப்படையில்  அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெயின்போ ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில்  வெளியில் வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய ஹோட்டல் மேலாளர் விஷ்ணுபாரதி உட்பட 4 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் தேடி வருகின்றனர்.

First published:

Tags: BJP, Coimbatore, Crime News