முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் இந்து‌ முன்னணி பொறுப்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. காவல்துறையினர் விசாரணை

கோவையில் இந்து‌ முன்னணி பொறுப்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. காவல்துறையினர் விசாரணை

கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்து‌ முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகுவின் காரில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் நேற்றைய தினம் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்டம், பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். அதை தொடர்ந்து ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

இதனையடுத்து கோவை பாஜக அலுவலகம் பாதுகாப்பு பணிக்காக ஏரளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட பாஜகவினர் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று, இந்து‌ முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகுவின் காரில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதையும் வாசிக்க: ஆ.ராசாவிற்கு மிரட்டல் : பாஜக மாவட்ட தலைவர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

கோவையில் ஏற்கனவே பாதுகாப்பிற்காக இருக்கும் காவல்துறையினருடன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையை சேர்ந்த 4 கம்பெனி போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தப்படுகிறது. மேலும் அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல், கோவில், தலைவர்களின் சிலை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Fire, Hindu Munnani