முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி சென்னை நீதிமன்றத்தில் சரண்!

கோவை துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி சென்னை நீதிமன்றத்தில் சரண்!

சஞ்சய் ராஜா

சஞ்சய் ராஜா

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சஞ்சய் ராஜா எக்மோர் நீதிமன்றத்தில் சரண்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கோவையில் பாப்பநாயக்கன் பாளையத்தில் சக்தி என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவை போலீசார் தேடி வந்த நிலையில் சஞ்சய் ராஜா எக்மோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சக்தி (எ) சத்திய பாண்டி(32). இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து சத்திய பாண்டியை சுற்றி வளைத்து கத்தியால் வெட்டினர். அப்போது அவர் தப்பித்து ஓடி ஒரு வீட்டில் உள்ளே நுழைந்துள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதுடன் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வந்த நான்கு குற்றவாளிகள் காஜா உசேன் (23), சல்பான் கான் (23), ஆல்வின் (34), சஞ்சய் குமார் (23) ஆகியோர் அரக்கோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜாவை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சஞ்சய் ராஜா எக்மோர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

First published:

Tags: Coimbatore, Crime News, Surrender