ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை: அயன் படத்தை மிஞ்சும் சம்பவம்.. உள்ளாடைக்குள் நகைகள்.. ரகசிய தகவலால் சிக்கிய 12கிலோ தங்கம்!

கோவை: அயன் படத்தை மிஞ்சும் சம்பவம்.. உள்ளாடைக்குள் நகைகள்.. ரகசிய தகவலால் சிக்கிய 12கிலோ தங்கம்!

தங்கம் கடத்தல்

தங்கம் கடத்தல்

Coimbatore | 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore

  ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை நூதன முறையில் கடத்தி வருவார் ஹீரோ. இப்படியெல்லாம் விமான நிலையத்தில் கடத்தல் செய்யமுடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு சம்பவம் கோவை விமான நிலையத்தில் நடந்துள்ளது.

  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில், 18 பயணிகளை தடுத்து நிறுத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

  அவர்களில், 4 பேர் உடல் மற்றும் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களிடம் இருந்து 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதையும் படிங்க | ஆட்சியர் அலுவலகத்தை தக்காளி சந்தையாக்கிய விவசாயிகள்.. கோவையில் நூதன போராட்டம்

  இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார், கடலூர் ஷங்கர், பரமக்குடி ராம் பிரபு , சேலம் குமரவேல் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  மேலும், தங்கக் கடத்தல் தொடர்பாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  செய்தியாளர்: ஜெரால்டு, கோவை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Airport, Coimbatore, Gold, Smuggling